பொதுமக்களுக்கு மஞ்சப் பை வினியோகம்

வத்தலக்குண்டுவில் ெபாதுமக்களுக்கு மஞ்சப் பை வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2023-05-14 19:00 GMT

வத்தலக்குண்டு செனார்டு தொண்டு நிறுவனம், அமுதம் பவுண்டேஷன் மற்றும் பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளி இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாமை நடத்தியது. இதில் பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 500 மஞ்சப் பை மற்றும் பழ மரக்கன்றுகளை வினியோகம் செய்தனர்.

தொண்டு நிறுவன செயலாளரும், அமுதம் பவுண்டேஷன் தலைவருமான கிருஷ்ணமூர்த்தி, பள்ளியின் தாளாளர் கயல்விழி, பள்ளி முதல்வர் ரியா அருண் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும், இயற்கையுடன் இணைந்து வாழ்தல் பற்றியும் மாணவர்கள் விளக்கி கூறினர். முகாமுக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் ஹம்சாரஞ்சனி, பிரபாவதி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்