ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது

Update: 2023-06-14 18:45 GMT

குடவாசல்:

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் செயல்படும் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் ஆண்டு தோறும் நடைபெறும். இந்த ஆண்டு குடவாசல், மஞ்சக்குடி, புதுக்குடி, சிமிழி, சேங்காலிபுரம், மூலங்குடி, மணப்பறவை உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி நடைபெற்று தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. நேற்று குடவாசல் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தினை திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் த. ரமேஷ், குடவாசல் விற்பனைக்குழு மேற்பார்வையாளர் ஜி.ரமேஷ் நடத்தினர். ஏலத்தில் பண்ருட்டி, விழுப்புரம், ஆந்திரா, கோவை, தேனி, கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து வியாபாரிகள் பங்கேற்றனர்.இப்பகுதி விவசாயிகள் 36 பேர் 196 தாட்டுகளில் பருத்தியை எடுத்துவந்திருந்தனர். நேற்றைய பருத்தி ஏலத்தில் அதிகபட்ச விலையாக குவிண்டால் ரூ.6459-க்கும் குறைந்தபட் விலையாக ரூ.5389-க்கும் ஏலம் போனது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்தி விலை மிகவும் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்