ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையிலும், மேற்பார்வையாளர் அன்பழகன் முன்னிலையிலும் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. 527 லாட் (737.80 குவிண்டால்) பருத்தி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூர் மற்றும் செம்பனார்கோவில் பகுதிகளை சேர்ந்த 6 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11,111-க்கும், குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.7,989-க்கும், சராசரியாக ஒரு குவிண்டால் ரூ.9500-க்கும் விலை கேட்கப்பட்டிருந்தது. இந்த மறைமுக ஏலத்தில் மொத்தம் ரூ.70 லட்சத்திற்கு பருத்தி வியாபாரமானதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.