183 இடங்களில் கொரோனா தடுப்பு ஒத்திகை

கோவையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் உள்பட 183 இடங்களில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை கலெக்டர் கிராந்தி குமார் ஆய்வு செய்தார்.

Update: 2023-04-10 18:45 GMT

கோவை

கோவையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் உள்பட 183 இடங்களில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை கலெக்டர் கிராந்தி குமார் ஆய்வு செய்தார்.

ஒத்திகை நிகழ்ச்சி

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் நேற்றும், இன்றும் கொரோனா தடுப்பு குறித்து ஒத்திகை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் வந்தால், உடனடியாக தேவையான மாதிரி புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை, சிகிச்சைக்கு பின் நோயாளிகளை கண்காணிப்பில் வைக்கும் சாதாரண வார்டு உள்ளிட்டவை தற்காலிகமாக அமைக்கப்பட்டது.

திடீரென தொற்று பாதிக்கப்பட்டு ஒருவர் அனுமதியானால், அவரை அணுக வேண்டிய நடைமுறை, சிகிச்சை வழிகாட்டுதல் குறித்து ஒத்திகை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை சரிபார்ப்பு, ஆக்ஸிஜன் அளவு அதன் பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

இதனை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா, ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் என பலர் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 183 மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஆய்வுக்குப் பின்னர் கலெக்டர் கிராந்திகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா ஒத்திகை நடக்கிறது.

கொரோனா நோயாளி களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது. கோவை தனியார் ஆஸ்பத்திரியில் தற்போது 13 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவையில் பெரியளவில் கொரோனா பாதிப்புகள் இல்லை. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

400 பேருக்கு பரிசோதனை

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மாவட்டத்தில் கொரோனா அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தினமும் 300 முதல் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதிகள் தேவைக்கு ஏற்ப உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்