மேலும் 8 பேருக்கு கொரோனா
மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 14,510 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதில் 14,223 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரையில், 249 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரம்பலூரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,510 ஆக உயர்ந்துள்ளது.