மேலும் 3 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-13 20:38 GMT

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுகிறது. நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியப்படும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்படுகிறது.

தற்போது நாள்தோறும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனைக செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நேற்று காலை வெளியான பட்டியலில் நெல்லை மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்