நாமக்கல்லில் முன்னாள் மத்திய மந்திரிக்கு கொரோனா

நாமக்கல்லில் முன்னாள் மத்திய மந்திரிக்கு கொரோனா

Update: 2022-07-02 16:53 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் ஒற்றை இலக்கத்தில் இருந்த தினசரி பாதிப்பு, தற்போது இரட்டை இலக்கமாக மாறி உள்ளது. இந்த நிலையில் லேசான காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்த நாமக்கல்லை சேர்ந்த முன்னாள் மத்திய இணை மந்திரி காந்திசெல்வன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் ஏற்கனவே ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்