கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பணி ஓய்வு நிறுத்தி வைப்பு
கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சேலம் மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளராக பணியாற்றியவர் தமிழ்செல்வன். இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி ரூ.1 கோடி ஒரு தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் இந்த நிறுவனம் முடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இதனால் முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கு உரிய வட்டி ரூ.45 லட்சம் வங்கிக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து வங்கிக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
இதற்கிடையே வங்கி பொதுமேலாளர் தமிழ்செல்வன் கடந்த 30-ந் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். அதற்கு முன்னதாக அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன், அவர் ஓய்வுக்கான அரசு ஆணையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.