சமையல் எண்ணெய் தேவையும், உள்ளூர் உற்பத்தியும் அதிகரிப்பு

சமையல் எண்ணெய் தேவையும், உள்ளூர் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக வணிக வட்டாரத்தில் கூறினர்.

Update: 2022-11-22 19:07 GMT


சமையல் எண்ணெய் தேவையும், உள்ளூர் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக வணிக வட்டாரத்தில் கூறினர்.

சமையல் எண்ணெய்

இதுகுறித்து சமையல் எண்ணெய் வணிக வட்டாரத்தினர் மேலும் கூறியதாவது:-

நம் நாட்டில் சமையல் எண்ணெய் தேவைக்கு 70 சதவீதம் இறக்குமதி சமையல் எண்ணெயை நம்பி இருக்கும் நிலை உள்ளது. உள்ளூர் உற்பத்தி 30 சதவீதம் மட்டுமே இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காலத்தில் சமையல் எண்ணெய் பயன்பாடு 7.8 சதவீதம் குறைந்திருந்த நிலையில், கடந்த 2020-21-ம் ஆண்டில் 0.95 சதவீதமாக இந்த குறைவு இருந்தது.

2021-2022-ம் ஆண்டில் சமையல் எண்ணெய் பயன்பாடு சராசரியை விட 1.78 சதவீதம் அதிகரித்தது. நடப்பு நிதி ஆண்டில் இது 2.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் சமையல் எண்ணெய் விற்பனையும் பரவலாகவே அதிகரித்து உள்ளது.

உள்ளூர் உற்பத்தி

இதேபோன்று கொரோனா பாதிப்பு காலத்தில் சமையல் எண்ணெய் தேவை குறைவாக இருந்தாலும் உள்ளூர் உற்பத்தி 7.04 மில்லியன் டன்னாக இருந்த நிலையில் 2020-21-ல் உற்பத்தி 8.43 மில்லியன் டன்னாக உயர்ந்தது. கடந்த 2021 -22-ல் உற்பத்தி 9.05 மில்லியன் டன்னாக உயர்ந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் இது 9.3 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் சமையல் எண்ணெய் தேவை அதிகரிக்கும் நிலையில் உள்ளூர் உற்பத்தி அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதிகரிக்க வாய்ப்பு

100 சதவீத தேவைக்கு உள்ளூர் உற்பத்தி செய்ய இயலாவிட்டாலும் விரைவில் 45 முதல் 65 சதவீதம் வரை உள்ளூர் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வட மாநிலங்களில் எண்ணெய் வித்து சாகுபடியும், தெலுங்கானாவில் 20 லட்சம் ஏக்கரில் பாமாயில் விதை பயிரிடப்பட்டுள்ளதாலும் வரும் ஆண்டுகளில் உள்ளூர் சமையல் எண்ணெய் உற்பத்தி நிச்சயமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பிற நாடுகளில் குறைந்த பரப்பளவில் அதிக எண்ணெய் வித்து சாகுபடி செய்வதை போல நமது நாட்டிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதன்மூலம் உள்ளூர் சமையல் எண்ணெய் உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்