அழகப்பா அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
அழகப்பா அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா 3 நாட்கள் நடக்கிறது.
காரைக்குடி
காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2019-20, 2020-21 மற்றும் 2021-22-ம் கல்வியாண்டுகளில் படித்து பட்டம் பெற தகுதியான இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வியல் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா 25-ந் தேதி முதல் 3 நாட்கள் கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.
விழாவில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களது துறை தலைவர்களிடம் பட்டமளிப்பு சார்ந்த விவரத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.