முன்அறிவிப்பு இன்றி தொடர் மின்தடை
கொடைரோடு பகுதியில் முன்அறிவிப்பு இன்றி தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கொடைரோடு, அம்மையநாயக்கனூர், அம்மாபட்டி, பொம்மணம்பட்டி, ராஜதானிக்கோட்டை, ராமராசபுரம், ஜெகநாதபுரம், மாவுத்தன்பட்டி, மாலையகவுண்டன்பட்டி, முருகத்தூரான்பட்டி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் அறிவிப்பின்றி கடந்த சில நாட்களாக தொடர் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அம்மைநாயக்கனூர் போலீஸ்நிலையம், பேரூராட்சி அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தபால்நிலையங்கள் மின்தடையால் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே வரும் காலங்களில் தொடர் மின்தடை ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.