மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 26 ஆயிரம் கன அடியாக நீடிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்,
மேட்டூர் அணைக்கு கடந்த வாரம் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தானது 1-ந் தேதி காலை வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது. இரவு வினாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. 1-ந் தேதி இரவு முதல் நேற்று மாலை வரை நீர்வரத்து வினாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. அதாவது தொடர்ந்து 4-வது நாளாக அணைக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கதாகும். நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 26 ஆயிரத்து 750 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.