குற்றால அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-04 02:41 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. அதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கூட்டம் சற்று குறைந்துள்ளது.

இந்த நிலையில் குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்