மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில், ஒரத்தநாடு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோரின் மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஒரத்தநாடு ஊரணிபுரம், திருவோணம், வடசேரி, பாப்பாநாடு, உறந்தராயன் குடிக்காடு, ஒக்கநாடுகீழையூர், பின்னையூர், பொய்யுண்டார் கோட்டை, கண்ணுகுடி மேற்கு, மேலஉளூர், சாலியமங்கலம், மாரியம்மன் கோவில், அம்மாப்பேட்டை, சூரக்கோட்டை மற்றும் பனையக்கோட்டை ஆகிய மின்சார பிரிவு அலுவலகங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஒரத்தநாடு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) மணிவண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.