கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல்லில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
திண்டுக்கல்லில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட பிரதிநிதி சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் முருகேசன் வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு இட ஒதுக்கீடு பற்றி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு திண்ணை பிரசாரம் நடத்த வேண்டும். தமிழகத்தில் சாதி வாரி கணக்கு நடத்தி, இடஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அழகர், ஆலோசகர் இளங்கோவன் ஆகியோர் பேசினர். இதில் கவுரவ ஆலோசகர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சிவராமன் நன்றி கூறினார்.