சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கலந்தாய்வு கூட்டம்
சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை போக்குவரத்து போலீஸ், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் தேவாங்கர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதில் கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணி திட்ட பணியாளர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.