குறிஞ்சிப்பாடி, புவனகிரி பகுதி பரவனாற்றில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

குறிஞ்சிப்பாடி, புவனகிரி பகுதி பரவனாற்றில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-02 18:45 GMT


குறிஞ்சிப்பாடி, 

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் நடு பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறிஞ்சிப்பாடி பகுதிக்குட்பட்ட அரங்கமங்கலம், மருவாய், கல்குணம், பரதம்பட்டு மற்றும் புவனகிரி பகுதிக்குட்பட்ட கரைமேடு, எல்லைகுடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள்ளும், விளை நிலங்களுக்கும் வெள்ளம் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள பரவனாற்றில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் பரவனாற்றில் தடுப்புச்சுவர் அமைக்க நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டதுடன், அந்த பணிக்கான தொடக்க விழா குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம் கிராமத்தில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

விழாவில் கடலூர் மாவட்ட கல்விக்குழு தலைவரும், பொறியாளருமான சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார், கல்குணம் ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சிபிரதிநிதிகள் ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்