ரூ.1¾ கோடியில் பூங்கா அமைக்கும் பணி
செஞ்சி பி ஏரியில் ரூ.1¾ கோடியில் பூங்கா அமைக்கும் பணி அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு
செஞ்சி
செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட திருவண்ணாமலை சாலையில் உள்ள பி ஏரிக்கரையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்பில் பூங்கா மற்றும் ஏரி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ரூ.6 கோடியே 74 லட்சம் மதிப்பில் செஞ்சி பஸ் நிலைய விரிவாக்க பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாக குறித்த காலத்தில் முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத், செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், கவுன்சிலர்கள் கார்த்திக், வெங்கடேசன், சுமித்ராசங்கர், அரசு ஒப்பந்ததாரர் கோடீஸ்வரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் ரமேஷ், செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டரணி பாஷா, பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.