அரசுக்கு சொந்தமான இடத்தில் ஊராட்சி கட்டிடம் கட்டும் பணி

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஊராட்சி கட்டிடம் கட்டும் பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

Update: 2023-04-22 16:17 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமநாயக்கன்பட்டி ரெயில்வே ேகட் அருேக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அதற்காக ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளளது.

கட்டுமானப் பணி தொடங்கும் முன் கடந்த 4-ந்தேதி மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி சம்பவ இடத்துக்கு வந்து இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், இந்த இடம் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சம்பந்தப்பட்ட இடம். இந்த இடத்துக்கு பட்டா வழங்கப்பட்டு, தற்போது பொது இடமாக உள்ளது. எனவே இந்த இடத்தில் புதிய அலுவலகம் கட்டக்கூடாது, என எச்சரிக்ைக விடுத்தார். ஆனால், எச்சரிக்கைைய மீறி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பிற துறை அதிகாரிகளும் தொடர்ந்து எச்சரித்தனர். ஆனாலும் கட்டுமானப் பணி நீடித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் அருணா மற்றும் வருவாய்த்துறையினர் ேநற்று சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அங்கு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகள், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான பொது இடம் எனப் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதை மீறி புதிய கட்டிடத்தை ஏன் கட்டுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து கட்டுமானப் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்