அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் புதிய குளங்கள் அமைக்கும் பணி

அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் புதிய குளங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

Update: 2022-08-31 17:32 GMT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் இதர திட்டங்கள் மூலமாக பணி மேற்கொள்ளப்படாத நீர் ஆதாரங்களை மத்திய அரசின் புதிய திட்டமான அம்ரித் சரோவர் திட்டத்தின்கீழ் புதிய குளங்கள் உருவாக்குதல் மற்றும் புனரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தனூர் வெள்ளி மலை அருகிலும், மருதடி ஈச்சங்காடு அருகிலும் தலா ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் புதியதாக உருவாக்கப்பட்டு வரும் குளங்களின் பணிகளின் நிலை குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த நிதியாண்டில் 32 குளங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நாட்டார்மங்கலம் ஊராட்சியில் கூத்தனூர் வெள்ளிமலை நாரணமங்கலம் ஊராட்சியில் மருதடி ஈச்சங்காடு அருகில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.இதேபோன்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், செங்குணம் ஊராட்சியிலும், எசனை ஊராட்சியில் பூந்தோப்புக்குளம் அருகிலும், வேப்பந்தட்டை ஒன்றியம், பசும்பலூர் ஊராட்சியில் ரெட்டிச்சி குளம் அருகிலும், தொண்டமாந்துரை ஊராட்சி விஜயபுரம் கிராமத்திலும் மொத்தம் ரூ.34 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் 6 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. வேப்பூர் ஒன்றியம் பரவாய் ஊராட்சியில் உள்ள சிலம்பூரான் குட்டை மற்றும் புள்ளக்குட்டை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். மேலும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 6 பணிகள் என 24 பணிகள் தொடங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கனிமவள உதவி இயக்குனர் சத்தியசீலன், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவரம்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்