சாலையை கடக்க மேம்பாலம் அமைக்கும் பணி

குனியமுத்தூர் அரசு பள்ளி அருகே சாலையை கடக்க மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. அங்கு விபத்தை தடுக்க இரும்புத்தடுப்புகள் வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-11-10 18:45 GMT

கோவை

கோவையில் நாளுக்குநாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் சாலையை கடக்க வசதியாக காந்திபுரம், கோவை-பாலக்காடு ரோடு குனியமுத்தூர், மேட்டுப்பாளையம் ரோடு தனியார் பல்கலைக்கழகம் அருகே நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் குனியமுத்தூரில் கட்டப்பட்ட நடை மேம்பாலத் தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவது இல்லை. எனவே அங்குள்ள அரசு பள்ளி அருகே நடை மேம்பாலம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக ரூ.35 லட்சத்தில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

இதையடுத்து அரசு பள்ளி அருகே மாணவர்கள் சாலையை கடக்க வசதியாக நடை மேம்பாலம் அமைப்பதற்காக பொக் லைன் எந்திரம் மூலம் சாலையின் இருபுறமும் 15 அடி ஆழத்திற்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.

ஆனால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ரோட்டில் பள்ளம் தோண்டப் பட்டு உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து. தற்போது அந்த பள்ளத்தை சுற்றி ஒரு சில இடங்களில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பள்ளத்தை சுற்றிலும் இரும்புத்தகரம் வைத்து மறைத்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்