நேரு உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
நினைவு தினத்தையொட்டி நேரு உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாியாதை செலுத்தினர்
நெல்லை:
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட நேரு உருவப்படத்திற்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்சரவணன், மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் டியூக்துரைராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் வண்ணை சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காமராஜர், இந்திரா காந்தி ஆகியோரின் சிலைகளுக்கும் மாலை அணிவிக்கபட்டது.