புளியங்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

புளியங்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-21 12:10 GMT

புளியங்குடி:

'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் ராகுல் காந்தியிடம் மூன்று நாட்களாக அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையை கண்டித்தும், புதுெடல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் புளியங்குடி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் டி.என்.புதுக்குடி காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, புளியங்குடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி கவுன்சிலர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், ராமநாதபுரம் ஊராட்சி தலைவரும், வட்டார காங்கிரஸ் தலைவருமான மகேந்திரன், மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி தலைவர் மணிகண்டன், மாநில வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் நகர காங்கிரஸ் துணைத் தலைவர்கள் ஈஸ்வரமூர்த்தி, அம்மையப்பன், பொதுச்செயலாளர் முகமது ஜவகர்லால், செயலாளர் ராஜ் அருணாசலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டிச்சேரி சுப்பையா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜான் அகஸ்டின் ராஜா, நகர காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் அந்தோணி ராஜ், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்