கவர்னரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் கவர்னரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் நாகல்நகரில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, சட்டசபையில் மரபை மீறிய கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சித்திக், சிவாஜி, மச்சக்காளை, அம்சவள்ளி, மாநகராட்சி மண்டல தலைவர் கார்த்திக், கவுன்சிலர் பாரதி, மாவட்ட பொதுச்செயலாளர் வேங்கைராஜா, மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜாபேகம், மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் காளிராஜ், இளைஞரணி தலைவர் அலியார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.