பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-06 18:40 GMT

 காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் புகைப்படத்தை 10 தலைகளுடன் சித்தரித்து நவீன கால ராவணன் என பா.ஜ.க. வெளியிட்டு இருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து கரூர் மதுரை பை-பாஸ் சாலையில் உள்ள கரூர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவித்திருந்தனர். இதனையொட்டி நேற்று பா.ஜ.க அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. மேலும் பா.ஜ.க. அலுவலகத்திற்கு முன்பாகவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பா.ஜ.க. அலுவலகத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க்.சுப்பிரமணியன் தலைமையில் முற்றுகையிட வந்த வடக்கு மாநகர தலைவர் ஸ்டீபன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரசார் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்