கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-17 16:18 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா, நகரமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது பொய் வழக்கு போடப்படுவதை கண்டித்தும், காங்கிரஸ் தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தியும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் மீனவர் காங்கிரஸ் நிர்வாகி ராஜி, மாவட்ட நிர்வாகி ஆறுமுகம் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்