காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கொள்ளிடம்:
ராகுல் காந்தியின் எம். பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து கொள்ளிடம் பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு வட்டார தலைவர் ஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கனிவண்ணன், கிழக்கு வட்டாரத் தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், எஸ். சி. எஸ். டி பிரிவின் மாவட்ட தலைவர் கிள்ளிவளவன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் சித்ராசெல்வி விசுநாதன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.