காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்

காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-26 18:34 GMT

ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டு தண்டனை வழங்கி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் அறவழிப்போராட்டமாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராம.சுப்புராம் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்