ராணிப்பேட்டையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்த நாள் விழா

ராணிப்பேட்டையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-10-22 18:04 GMT

ராணிப்பேட்டை முத்துக்கடையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் அண்ணாதுரை வரவேற்றார்.

ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் வாழ்த்துரை வழங்கினார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்