இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் காங்கிரஸ் எதிரான கட்சி அல்ல

இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் காங்கிரஸ் எதிரான கட்சி அல்ல என்று மன்னார்குடியில், கே.எஸ். அழகிரி கூறினார்.

Update: 2022-10-11 18:45 GMT

மன்னார்குடி:

இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் காங்கிரஸ் எதிரான கட்சி அல்ல என்று மன்னார்குடியில், கே.எஸ். அழகிரி கூறினார்.

பேட்டி

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழர்களுக்கு எதிராகவும் தமிழ் உணர்வுகளுக்கு எதிராகவும் செய்திகளை கூறுவதில் பயிற்சி பெற்றவராக உள்ளார். மொழி வாரியாக மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டை ஒன்றிணைத்தது ஜவஹர்லால் நேருதான். வரலாற்றை ஆளுநர் ஆர்.என்.ரவி திரித்து கூறுகிறார்.இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் காங்கிரஸ் எதிரான கட்சி அல்ல. ஆனால் எந்த மொழியையும் திணிக்க கூடாது என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை. காங்கிரஸ் கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரி என்பது குறைவான வரி. பா.ஜனதா 25 சதவீதம் வரை ஜி.எஸ்.டி வரி விதிப்பை கொண்டு வந்துள்ளது. இதை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை.

இலவசம்

ஏசு கிறிஸ்து, நபிகள் நாயகம், காந்தியடிகள் போன்றோர் தனது தோழர்களுக்கு அறிவுரை கூறியது போல் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தோழர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.சமச்சீரற்ற இந்தியாவில் இலவசம் என்பது அவசியம். அதை கேவலமாக நினைக்க கூடாது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் வாக்களிக்கும் உரிமைகள் உள்ள அனைவரும் அவர்களது சொந்த விருப்பத்திற்கு ஏற்ப வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன், மன்னார்குடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.கனகவேல் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்