காங்கிரஸ் நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை
காங்கிரஸ் நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம், ஒரத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 65). காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொது செயலாளராக இருந்த இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மங்கையர்க்கரசி, மகன் மற்றும் மகளுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் வாந்தி எடுத்ததை கண்ட அவரது உறவினர் முருகானந்தம், செல்வராஜை அரியலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்தபோது, அவர் பூச்சி மருந்து(விஷம்) குடித்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.