வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு

வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு

Update: 2022-11-28 18:45 GMT

நாகை மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான சதுரங்கபோட்டியில் 1 முதல் 9 வயதினருக்கானோர் பிரிவில் திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் காமராஜர் நர்சரி பிரைமரி பள்ளி மாணவன் ஆர்.ரோகித் (வயது 6) கலந்து கொண்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவனுக்கு போட்டி நடந்த அகரம் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் விவேக் வெங்கட்ராமன், தமிழ்நாடு செஸ் அகாடமி இணைச்செயலாளர் பாலகுணசேகரன், நாகை மாவட்ட சதுரங்க அசோசியன் செயலாளர் சுந்தர்ராஜ், இலக்குவனார் அகாடமி மணிமொழி, ஆடிட்டர் வினோத் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்