இருதரப்பினரிடையே மோதல்; 8 பேர் மீது வழக்கு

கீரமங்கலத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-12-17 18:30 GMT

கீரமங்கலம் மேற்குபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக்மைதீன். இவருடைய மனைவி சவுதம்மாள் பீவி (வயது 55). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து சவுதம்மாள் பீவியின் இறுதிச்சடங்கு முடிந்த மறுநாள் உறவினர்கள் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 6 பெண்கள் உள்பட 7 பேர் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்