ரிஷிவந்தியம் அருகே ஓடும் பஸ்சில் மாணவர்களுக்கிடையே மோதல்; 13 பேர் மீது வழக்கு
ரிஷிவந்தியம் அருகே ஓடும் பஸ்சில் இருகிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது/ இதுதொடர்பாக 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரிஷிவந்தியம்,
கள்ளக்குறிச்சியில் இருந்து கீழ்பாடி வழியாக லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர். அந்த பஸ் ரிஷிவந்தியம் அடுத்த மேல தேவனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பஸ்சில் வந்த கோமாளூர், சேரந்தாங்கல் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். ஓடும் பஸ்சில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருகிராமங்களை சேர்ந்த மாணவர்கள் 13 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.