பயணிகளை ஏற்றுவது தொடர்பாக2 பஸ் கண்டக்டர்களிடையே மோதல்திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனத்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக 2 பஸ் கண்டக்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-26 18:45 GMT

திண்டிவனம், 

திருச்சியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வந்த அரசு பஸ் நேற்று மாலை திண்டிவனம் இந்திரா காந்தி பழைய பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக வந்து நின்றது. அதன்பிறகு சிலநிமிடங்களில் மதுரையிலிருந்து காஞ்சீபுரம் நோக்கி செல்லும் மற்றொரு அரசு பஸ்சும் அங்கு வந்து நின்றது. அப்போது காஞ்சீபுரம் செல்லும் 2 பஸ்களின் கண்டக்டர்கள் இடையே பயணிகளை ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். இதை அந்த 2 பஸ்களில் வந்திருந்த பயணிகள் மற்றும் அங்கு நின்ற பயணிகள் வேடிக்கை பார்த்தனர். பின்னர் பயணிகள் இருபஸ்களின் கண்டக்டர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து 2 பஸ்களும் பயணிகளை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து காஞ்சீபுரம் நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்