முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல்

முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-12-06 20:52 GMT

திருச்சி:

திருச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது சத்திரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம் மற்றும் என்.எஸ்.பி.ரோடு பகுதிகளில் உள்ள பழக்கடைகள் மற்றும் சாலையோர கடைகளில் விற்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை விற்பனை செய்ய தரமற்ற தராசுகள் உபயோகிப்பதாகவும், முத்திரையிடப்படாத எடைக்கற்களை உபயோகப்படுத்துவதாகவும், பொருட்களின் எடைகள் குறைவாக உள்ளதாகவும் நுகர்வோர் புகார் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில், திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கார்த்திக், லட்சுமி, பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோருடன் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் சத்திரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம் மற்றும் என்.எஸ்.பி. ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோர கடைகள், பழக்கடைகள் மற்றும் இதர கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, முத்திரையிடப்படாத 26 மின்னணு தராசுகள், 34 தரமற்ற மேஜை தராசுகள், 75 முத்திரையிடப்படாத எடைக்கற்கள் மற்றும் 4 ஊற்றளவைகள் (உலக்கு) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவலை திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்