மாவு கடையில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; உரிமையாளர் கைது

பழனியில் மாவு கடையில் 1 டன் ரேஷன் அரிசியை பதுக்கிய உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-07 20:45 GMT

பழனி பெரியகடைவீதி பகுதியில் உள்ள ஒரு மாவுக்கடையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் பழனி பட்டத்து விநாயகர் கோவில் பகுதியில் உள்ள மாவு கடையில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த கடையில் சாக்கு மூட்டைகளில் ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளரான பழனி வெள்ளையன்தெருவை சேர்ந்த முருகானந்தம் (வயது 56) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்