ராசிபுரத்தில் 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ராசிபுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2¼ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வீட்டின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-08 18:50 GMT

2¼ டன் ரேஷன் அரிசி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வரதன் தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாமக்கல் மாவட்ட குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 2¼ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ரஜினி (வயது43) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு

அவரிடம் ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்