மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்
தேவதானப்பட்டி அருகே மணல் அள்ளிய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மாட்டுவண்டி ஒன்று வந்தது. போலீசாரை கண்டதும் வண்டியை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் மாட்டு வண்டியில் போலீசார் சோதனை செய்தபோது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோவில் ரோட்டை சேர்ந்த கணேசன் (வயது 48) என்பவரை தேடி வருகின்றனர்.