மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-09-15 15:31 GMT

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், கண்ணன், தர்மர், வெண்மணி, லெனின் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அரிக்கேன் விளக்கை கையில் பிடித்தபடி மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்