காங்கிரஸ் கட்சியினர் கண்டன கூட்டம்

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் காளையார்கோவில் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் காளையார்கோவிலில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-18 18:45 GMT

காளையார்கோவில்

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் காளையார்கோவில் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் காளையார்கோவிலில் கண்டன கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மன், பி.சி.சி. உறுப்பினர் சார்லஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சனநாச்சியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், எஸ்.சி., எஸ்.டி மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், கவுன்சிலர் கலைவாணி, ஊராட்சி மன்ற தலைவர் முரளி, வட்டார விவசாய பிரிவு தலைவர், குழந்தைதாஸ் வட்டார தலைவர் ரமேஷ், பச்சமுத்து, அமல்ராஜ், ஆரோக்கியம் நேமம், பாருக், சோமன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இளைஞரணியினர், மகளிரணியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்