சொத்து வரி உயர்வை கண்டித்துஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்பிச்சை எடுக்கும் நூதன போராட்டம்

நூதன போராட்டம்

Update: 2023-01-02 19:30 GMT

சொத்து வரி உயர்வை கண்டித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது.

நூதன போராட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கினார்.

ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நலச்சங்கத்தின் செயலாளர் பாரதி தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் சொத்துவரி, வீட்டு வரி உயர்வை கண்டித்தும், குப்பைக்கு வரி விதிக்கப்பட்டதை கண்டித்தும் கைகளில் தட்டுடன் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கைகளில், "குப்பைக்கு வரி விதிக்காதே", "சொத்து வரி, வீட்டு வரி உயர்த்தாதே" போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி வந்தனர். இதனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து கைகளில் கொண்டு வந்த தட்டுகளை வெளியே வைத்துவிட்டு கூட்ட அரங்கிற்குள் மனு கொடுக்க சென்றனர்.

வரி விலக்கு

அதன்பிறகு அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:-

வீட்டு வரி, சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களுக்கு வரி உயர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். குப்பை வரியை முழுமையாக நீக்க வேண்டும். பாதாள சாக்கடை வைப்புத்தொகை, சேவை மாதாந்திர கட்டணங்கள் உயர்த்தியதை கைவிட வேண்டும். சொத்துவரி சீராய்வு சிறப்பு விசேஷ நோட்டீசு அனைவருக்கும் முழுமையாக வழங்காமலேயே கெடுபிடி மிரட்டல் விடுப்பதை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்