கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு சலுகை

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு சலுகை அறிவித்து இருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்து இருப்பதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. தகவல் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-04-05 20:22 GMT

திருமங்கலம்.

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றவும் மேலக்கோட்டைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரியிடம் நேரில் சந்தித்து விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்தார்.அதற்கு பதில் அளித்து நிதின் கட்காரி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;-

தங்களின் கோரிக்கையை ஆய்வு செய்தேன். கப்பலூர் சுங்கச்சாவடி பயன்படுத்துபவரிடம் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008-ம் ஆண்டின் விதிகளின்படி தான் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது டோல் பிளாசா TOT சலுகையால் இயக்கப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

அதாவது உள்ளூர் வாகனங்களுக்கு டோல் பிளாசாவில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திற்குள் வசிப்பவர்களுக்கு வணிகம் சாராத வாகனங்கள் பயன்படுத்துவதற்கு ஆண்டுக்கு ரூபாய் 315 வசூலிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கு (தேசிய அனுமதியின் கீழ் இயங்கும் வாகனங்கள் தவிர) கட்டணம் 50 சதவீதம் தான் அதாவது சேவை சாலை அல்லது மாற்றுப்பாதை இல்லாதவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலிருந்து 50 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. அடிக்கடி பயன்படுத்துவோருக்கு ஒரு மாதத்திற்கு 50 பயணங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு கட்டணமும் மாதாந்திர அனுமதி சீட்டு வைத்திருந்து 24 மணி நேரத்திற்குள் திரும்புபவர்களுக்கு ஒன்றரை மடங்கு ஒற்றைக் கட்டணம் செலுத்தும் வசதியும் நீடிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் புதிய தொழில் நுட்பத்தை கொண்டு வருகிறோம் இது சிக்கல்களை தீர்க்க உதவும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து இருந்ததாக மாணிக்கம்தாகூர் எம்.பி. தெரிவித்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்