கட்டாய இந்தி தேர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

கட்டாய இந்தி தேர்வுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-23 17:05 GMT

சென்னை,

என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லா பணிகளுக்கு கட்டாய இந்தித் தேர்வு நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:- "மத்திய அரசின் கல்வி நிலையங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப இந்தி மொழி தேர்வு செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்தி திணிப்பால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகிறது. கட்டாய இந்தி தேர்வை என்.டி.ஏ நீக்கி அனைவருக்கும் பொதுவான தேர்வாக நடத்த வேண்டும். பன்முகத்தன்மை, மொழியியல், சமத்துவத்தை இந்தி திணிப்பு பாதிப்பதாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்