புகார்பெட்டி

புகார்பெட்டி

Update: 2023-03-05 18:45 GMT

விபத்து அபாயம்

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் கடைத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலை விபத்துக்கள் அவ்வப்போது நடக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? மணிகண்டன், கானாடுகாத்தான்

குரங்குகள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? குமரன், எஸ்.புதூர்.

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம்

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் உள்ள பகுதிநேர ரேஷன் கடையில் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே கசிந்து உணவுபொருட்கள் வீணாகின்றன. எனவே ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்திகேயன், வைகைவடகரை, சிவகங்கை.

வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் சுற்றுவட்டாரப்பகுதி சாலைகளில் சில இடங்களில் சேதமடைந்து காணப்படுகின்றது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணன், திருப்பத்தூர்.

நாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலையும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? வேல்ராஜ், இளையான்குடி.

Tags:    

மேலும் செய்திகள்