கூடுதல் பஸ் வசதி தேவை
மதுரை மாவட்டம் சாப்டூரில் இருந்து உசிலம்பட்டி செல்ல போதிய அளவு பஸ் வசதி இல்லை. இதனால் இந்த வழியாக பயணம் செய்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலவிரயம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப் படுகிறது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்திவேல், உசிலம்பட்டி.
சாலை சீரமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை கிராமம் மேலக்குயில்குடியில் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுவதால் இவ்வழியே செல்லும் மாணவர்களும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
செல்வம், மதுரை.
விபத்து ஏற்படும் அபாயம்
மதுரை மாநகர் 24-வது வார்டு மீனாம்பாள்புரம் கல்யாணசுந்தரம் வீதி சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்த நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே இந்த பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அபுபக்கர், மதுரை.
குடிநீர் குழாய் சரிசெய்யப்படுமா?
மதுரை மாநகர் 10-வது வார்டு கோ.புதூர் எஸ்.கொடிக்குளம் முதல் தெருவில் உள்ள குடிநீர் குழாய் சில நாட்களாக சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக நீண்டதூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சஞ்சீவி, மதுரை.
பயணிகள் அவதி
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் பயணிகளை அச்சுறுத்துவதுடன் கடிக்க செல்கிறது இதனால் பஸ் ஏறுவதற்காக வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், மதுரை.