புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-17 17:24 GMT

வேகத்தடை அமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சமீபத்தில் சாலைகள் விரிவாக்கப்பட்டு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சில இடங்களில் ஏற்கனவே இருந்த இடத்தில் வேகத்தடை அமைக்கவில்லை. எனவே வேக தடையை மீண்டும் அதே இடத்தில் அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ் வசதி வேண்டும்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொசுத்தொல்லை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால் இந்த பகுதி முழுவதும் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாயை மூடி கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குவிந்து கிடக்கும் குப்பை

சிவகங்கை நகரில் பல இடங்களில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. மேலும், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் அச்சம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் சாலையில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்