சீரமைக்க வேண்டும்
குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட இலப்பவிளையில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள காங்கிரீட் சிலாப்புகள் மற்றும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தரைகற்களும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ-மணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சிலாப்புகளையும், சாலையையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதய்ரு, குளச்சல்.
விபத்து அபாயம்
கேசவன்புத்தன்துறையில் இருந்து பொழிக்கரைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.அந்தோணிதாசன். பொழிக்கரை.
ஆபத்தான மரம்
தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் சந்திப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் அருகில் வடிகால் ஓடையின் ஓரத்தில் மரம் ஒன்று நிற்கிறது. இந்த மரம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மரம் சாய்ந்து பஸ்நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள் மீது விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் நிற்கும் மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனில்குமார், பத்மநாபபுரம்.
நடவடிக்கை தேவை
நாகர்கோவில் ராமவர்மபுரம் பகுதியில் பழைய வங்கி காலனி உள்ளது. இந்த பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டி கடிக்க வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஜெயராம், ராமவர்மபுரம்.
பள்ளம் சீரமைக்கப்படுமா?
நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து வேப்பமூடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் செட்டிகுளம் சந்திப்பு திருப்பத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வளைவில் திரும்பும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.பி. நாதம், மீனாட்சிபுரம்.
மரத்தை அகற்ற வேண்டும்
நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை அருகில் வட்டார கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் காம்பவுண்டு சுவரின் அருகில் பட்டுப்போன மரம் ஒன்று நிற்கிறது. இந்த மரத்தின் அருகில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. அந்த பகுதியில் வீசும் காற்றில் எப்போது வேண்டுமானாலும் இந்த மரம் முறிந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது விழுந்து பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்டின் ரபேல், பனவிளை.