இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-28 19:30 GMT

கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சூரமங்கலம், தலைவாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்.என்.ரவியை கண்டித்து...

ஜெர்மன் நாட்டை சேர்ந்த தத்துவமேதை கார்ல் மார்க்ஸை இழிவுபடுத்தி கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாக கூறி அதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சூரமங்கலம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சூரமங்கலம் மண்டல செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் ராஜமாணிக்கம், செல்வம், விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கவர்னர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தலைவாசல்

இதேபோல் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவாசல் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். காரல் மார்க்ஸை இழிவாக பேசிய, கவர்னர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில், தலைவாசல் ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பாலன், தலைவாசல் ஒன்றிய விவசாய சங்க செயலாளர் ஆறுமுகம், மகளிர் அணி நிர்வாகிகள ்மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்