அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்வாச்சாத்தி வழக்கு வெற்றி பொதுக்கூட்டம்கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு
அரூர்:
அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வாச்சாத்தி வழக்கு வெற்றி பொதுக்கூட்டம் நடந்தது.
பொதுக்கூட்டம்
அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வாச்சாத்தி வழக்கு வெற்றி பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மத்தியகுழு உறுப்பினர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் டில்லிபாபு, சிசுபாலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன், மாநில பொருளாளர் பெருமாள், மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராதிகா, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.
கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:- வாச்சாத்தி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் போராடி உள்ளனர். அனைவரின் பங்களிப்போடு இந்த வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வழக்கில் உண்மையிலேயே பாராட்டபட வேண்டியவர்கள் வாச்சாத்தி கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள்.
போராட வேண்டும்
இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி கேட்டு செங்கொடியின் பின்னால் நின்று போராட்டம் நடத்தியதால் வரலாற்று தீர்ப்பு கிடைத்திருக்கிறது. அதிகாரிகளுக்கு இந்த வழக்கு ஒரு எச்சரிக்கை மணி. எங்கு அநியாயம் நடந்தாலும் நாம் போராட வேண்டும். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாட்டு மக்கள் பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கட்சி நிர்வாகிகள், பழங்குடி மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.